ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உதகை மற்றும் ஸ்ரீ சாந்தி விஜய் மெட்ரிகுலேஷன் பள்ளி உதகையில் 13-01- 2026 அன்று உதகை காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா அவர்கள் தலைமையில் பொங்கல் திருவிழாவின் நான்கு நாள் கொண்டாட்டங்களான போகி ,தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் பள்ளி மாணவ மாணவிகளால் ஆடல் பாடலுடன் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக விழாவில் சிறப்பு அழைப்பாளர் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களால் குத்து விளக்கு ஏற்றி விழா இனிதே தொடங்கியது. இந்நிகழ்வில் மூத்த வழக்கறிஞர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மற்றும் பள்ளியின் தாளாளர் எஸ் .மோதிலால் கட்டாரியா அவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் மேனக் சந்த் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களும் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியை பெருமக்கள் மாணவ மாணவிகள் விழாவில் கலந்துகொண்டு தங்கள் நடன திறமையை வெளிப்படுத்தி பொங்கல் விழாவை சிறப்பித்தார்கள்.
தமிழக குரல் இணையத்தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத்குமார். மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.


No comments:
Post a Comment