குடியரசு தின விழா
எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் 77 வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கே.சுஜாதா அவர்கள் வரவேற்புரையாற்றினார் விழாவின் சிறப்பு விருந்தினராக கல்லூரி தலைவர் திரு.என். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி, விழா சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்" பெண் கல்வி மிகவும் இன்றியமையாதது. கல்வி என்கின்ற ஆற்றல் மிக்க ஆயுதத்தால் தான் இந்தியா வல்லரசு நாடாக விளங்குகின்றது. மாணவிகள் கல்வியோடு தங்களது தனித் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் குடியரசு தின விழாவின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார் ". தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குடியரசு விழாவின் சிறப்புக்களை எடுத்துரைக்கும் விதமாக பேச்சு, நடனம், பாடல்,மாறுவேட அணிவகுப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. மாணவிகள் யோகக் கலையையும் நிகழ்த்திக் காட்டினர். இவ்விழாவில் அனைத்துத் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை தாலுகா செய்தியாளர் என். வினோத்குமார். மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.


No comments:
Post a Comment