தாயை பிரிந்த 6 மாத குட்டியானையை முதுமலையானை காப்பகத்துக்கு சேர்ப்பு: - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 January 2026

தாயை பிரிந்த 6 மாத குட்டியானையை முதுமலையானை காப்பகத்துக்கு சேர்ப்பு:

 


தாயை பிரிந்த 6 மாத குட்டியானையை முதுமலையானை காப்பகத்துக்கு சேர்ப்பு:        


25 நாட்களுக்கும் மேலான போராட்டத்திற்குப் பிறகு, 6 மாத வயதுடைய குட்டி யானை முதுமலை யானைகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உளிபண்டா வனப்பகுதியில் கடந்த 4ஆம் தேதி, தண்ணீர் குடிக்க வந்த யானைக் கூட்டத்திலிருந்து ஒரு 6 மாத குட்டி யானை அருகிலுள்ள குட்டையில் தவறி விழுந்தது. குட்டி யானையை மீட்க தாய் யானை உள்ளிட்ட யானைகள் நீண்ட நேரம் முயற்சி செய்தாலும், அதை மீட்க முடியாமல் இறுதியில் அந்த இடத்தை விட்டு கூட்டமாக விலகிச் சென்றன.


இதனைத் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஜவளகிரி வனத்துறையினர், பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குட்டி யானையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர், குட்டி யானையை அதன் தாய் யானையுடன் மீண்டும் சேர்க்கும் நோக்கில் 25 நாட்களுக்கும் மேலாக வனத்துறையினர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த முயற்சிகள் வெற்றியடையவில்லை.


இதன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட குட்டி யானையை, அஞ்செட்டி வனத்துறை காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, பால் மற்றும் உணவு வழங்கி வனத்துறையினர் பராமரித்து வந்தனர். இருப்பினும், தாயை இழந்த சோகத்தால் குட்டி யானை மெலிந்து சோர்வடைந்தது.


இந்த நிலையில், குட்டி யானையை அதன் தாயுடன் இணைக்க வேண்டும் அல்லது பாதுகாப்பான இடமான முதுமலை யானைகள் காப்பகத்திற்கு மாற்ற வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.


இதற்கிடையில், ரோந்து சென்ற ஜவளகிரி வனத்துறையினர், பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குட்டி யானையை மீட்டு, தாய் யானையுடன் சேர்க்க முயற்சி செய்தனர். 


இதற்காக யானைக் கூட்டத்தையும் அழைத்து வந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மனிதர்களின் வாசனை குட்டி யானையின் உடலில் பரவியிருந்ததால், யானைக் கூட்டம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது. பொதுவாக குட்டி யானைகளுக்கு மனித வாடை பிடிக்காது. காரணம், யானைகளின் மூக்கு மிகக் கூர்மையானது; மனிதரின் வாசனை அவற்றிற்கு அந்நியமாகவும், ஆபத்தானதாகவும் உணரப்படுகின்றது.


இதனை கருத்தில் கொண்டு. கிருஷ்ணகிரி.தர்மபுரி வன கோட்டம் மண்டல வன பாதுகாவலர். பத்மா., ஓசூர் வனக் கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகரின். ஆகியோர்கள் உத்தரவின் பேரில், அஞ்செட்டி வனச்சரகர் கோவிந்தன், வனத்துறை மருத்துவர் ஜெயச்சந்திரன், வனவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட வனத்துறையினர், 6 மாத குட்டி யானையை பாதுகாப்பாக வேன் மூலம் கொண்டு சென்று முதுமலை தெப்பகாட்டில் உள்ள யானைகள் முகாமில் ஒப்படைத்தனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad