கூடலூர் அருகே ஓவேலி அரசு மேல்நிலை பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 December 2025

கூடலூர் அருகே ஓவேலி அரசு மேல்நிலை பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது


கூடலூர் அருகே ஓவேலி அரசு மேல்நிலை பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது 


தமிழ்நாடு மின்சார வாரியம் கூடலூர் கோட்டம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், பள்ளி ஆற்றல் மன்றம் ஆகியன சார்பில் தேசிய மின்சிக்கன வாரவிழாவை முன்னிட்டு மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 


நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) கவிதா தலைமை தாங்கினார். 


உதவி மின் பொறியாளர்கள் தமிழரசன்(கூடலூர்),  ஹரிபிரசாத்(தேவர்சோலை), ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித்,  பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மகேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூடலூர் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துகுமார் பேசும்போது மின்சார உற்பத்தி மேற்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், மின்சார தேவைக்கு நிகரான உற்பத்தி மேற்கொள்ள மூல பொருட்களான யுரேனியம், நிலக்கரி, தண்ணீர் போன்றவை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் புவி வெப்பமயமாகிறது. எனவே மின்சாரம் சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள ஒவ்வொருவரும் உறுதி ஏற்று கொள்ளவேண்டும்.  தற்போது சூரியஒளி சோலார் மூலம் மின்உற்பத்தி மேற்கொள்ள அரசு மானியம் வழங்கி வருகிறது. மின்சார வாரியத்துடன் இணைந்து வீடுகளுக்கு சோலார் பேனல் அமைத்து மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். என்றார்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது 

மின்சார சேமிப்பில் ஒவ்வொருவரும் ஒரு யூனிட் சேமிக்கும் போது மின்சார உற்பத்தி செலவினம் குறையும். ஆடம்பர மின்விளக்குகள் பயன்படுத்துதல், ஆளில்லா நேரத்திலும் மின்சாதன பொருட்களை இயக்க வைத்தல் போன்றவற்றை தவிர்க்கலாம். மேலும் பிஇஇ குறியீடு மற்றும் ஐஎஸ் ஐ தரமுத்திரை பெற்ற வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும். இயற்கையாக காற்றோட்டம், வெளிச்சம் வரும் வகையில் கட்டிட அமைப்புகள் மேற்கொள்வதன் மூலமும் மின்சார செலவினத்தை குறைக்க முடியும். என்றார். 


நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad