பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தேசிய மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், ஆல் தி சில்ரன் ஆகியன சார்பில் கொளப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் விக்னேஷ்வரி, ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை தாங்கிய பள்ளி தலைமை ஆசிரியர் ஐயப்பன் பேசும்போது மின்சார உற்பத்தி நீர் மின் உற்பத்தி நிலையங்கள், காற்றாலைகள், நிலக்கரி, அனு உலைகள் சூரிய ஒளி உள்ளிட்டவை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய படுகிறது. மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்கள் அதிகரித்து வருவதாலும், மின்தேவையும் அதிகரித்து வருவதாலும் அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கும் வகையில் நாம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மின்சாரத்தை தேவை இல்லாத நேரங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். டிவி, பல்புகள், பேன் உள்ளிட்டவை யாருமில்லாத நேரத்தில் எரியவிடுவதை தவிர்க்க வேண்டும். பழைய மின்சார வயர்களை மாற்றி கொள்ள வேண்டும். மேலும் பிஇஇ குறியீடு மற்றும் ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற மின்சார பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் மின்சார சிக்கனம் பெறுவதோடு, நீண்ட பயனையும் பெறலாம் என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment