பந்தலூர் அருகே கூவமுலா பழங்குடியினர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு, ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், ஆல் தி சில்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், கூவமூலா பழங்குடியினர் கிராம பிரதிநிதிகள் குமார் கேத்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேவாலா வானசரகர் சஞ்சீவி, வானவர் சுரேஷ்குமார், சி பி ஆர் சுற்றுச்சூழல் மைய கள அலுவலர் குமாரவேலு ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.
இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு மருத்துவர் ஜெயினப்பாத்திலா, மருந்தாளுனர் நவீன், செவிலியர் சுமதி, நிர்வாக அலுவலர் லாய்ஷான் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.
அதுபோல கூவமூலா அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இம்முகாமில் பழங்குடியினர் பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் உட்பட 80க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

.jpg)
No comments:
Post a Comment