உதகை அரசு மருத்துவக்கல்லூரியில் இரத்த தான முகாம் ஒருங்கிணைப்பு அமைப்புகளுக்கு விருது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 December 2025

உதகை அரசு மருத்துவக்கல்லூரியில் இரத்த தான முகாம் ஒருங்கிணைப்பு அமைப்புகளுக்கு விருது


உதகை அரசு மருத்துவக்கல்லூரியில் இரத்த தான முகாம் ஒருங்கிணைப்பு அமைப்புகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி இரத்தவங்கி மற்றும் அரசு மருத்துவமனை இரத்த வங்கி களுக்கு இரத்த தேவைகளை நிவர்த்தி செய்ய இரத்த தான முகாம்களை தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைத்து கொடுக்கின்றனர். இவர்களை கவுரவிக்கும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் இரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் பாராட்டுவிழா நடைபெற்றது. 


இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மருத்துவக்கல்லூரி முதல்வர் ஶ்ரீசரவணன் பேசும்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் உயிரை காக்கும் வகையில் இரத்த தேவை அதிகரித்து வருகிறது .  இவற்றை ஈடுகட்டும் வகையில் தன்னார்வலர்களிடம் இரத்தம் சேகரிக்கப்படுகிறது. இரத்த சேகரிக்க மிகவும் சிரமப்பட்டு அர்ப்பணிப்புடன் முகாம்களை ஒருங்கிணைத்து தரும் அமைப்புகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். தற்போது விஷம் அருந்தியவர்கள் உயிர்பிழைக்க உதவும் பிளாஸ்மா உதகையில் மேற்கொள்ளபடுகிறது. இந்த சிகிச்சைக்கு இரத்த தேவை அதிகரித்து வருகிறது. இரத்தம் அதிகம் கிடைக்கும் சூழலில் அவர்கள் கோவை மருத்துவக்கல்லூரி அனுப்பாமல் உதகை சிகிச்சை அளித்து உயிர்காக்க முடியும். மேலும் இதர சிகிச்சைகள் மேற்கொள்ளவும் மாதம் சுமார் 150 யூனிட் வரை தேவைப்படுவதால் அனைத்து தன்னார்வ அமைப்புகளும் தொடர்ந்து ஆதரவு தரவேண்டும் என்றார்.


நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கேத்தி, எப்பநாடு, சேவா பாரதி, குன்னூர் இராணுவ கல்லூரி, ஜெ எஸ் எஸ் கல்லூரி, நீலகிரி சேவா கேந்திரம், நாம் தமிழர் கட்சி குருதி பாசறை, இந்திய செஞ்சிலுவை சங்கம் உட்பட 20கும் மேற்பட்ட இரத்த தான ஒருங்கிணைப்பு அமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது. 


நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், கூடலூர் அரசு கலைக் கல்லூரி உதவிபேராசிரியர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர்  மகேஸ்வரன், சேவா பாரதி அமைப்பு நிர்வாகி மற்றும் செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் மோரிஸ் சாந்த குரூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad