கூடலூர் அருகே சூண்டியில் காசநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 December 2025

கூடலூர் அருகே சூண்டியில் காசநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம்


கூடலூர் அருகே சூண்டியில் காசநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 


நீலகிரி மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன் அமைப்பு ஆகிய சார்பில் சூண்டி பஜாரில் காசநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 


ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், காச நோய்பிரிவு முதுநிலை மேற்பார்வையாளர் மனோஜ், ஆய்வக மேற்பார்வையாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்


கூடலூர் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார் காசநோய் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு காசநோய் கண்டறிதலுக்கான எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. 70கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்துகொண்டனர். இவை கூடலூர் அரசு மருத்துவ மனை பரிசோதனை கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு நோய் இருப்பது கண்டறிந்தால் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.


நிகழ்ச்சியில் ஓவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடுநிலை சுகாதார செவிலியர்கள் சசிகலா, பிந்து, கனகா மற்றும் ஆஷா பணியாளர்கள் திலகா, சுபாஷிணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad