உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குநர் (ஊ/த) அலுவலகத்தில் தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளின் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் / வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கே. சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம், உதகை தொகுதி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் அமீர்கான், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க பொதுசெயலாளர் பாலகிருஷ்ணன், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன், செயலாளர் ஆல்துரை, கோத்தகிரி புளூ மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமதுசலீம் ஆகியோர் பங்கேற்று பேசும்போது அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பொதுமக்கள், பழங்குடியினர் வாழ்வாதார திட்டங்கள் குறித்து தகவல் பலகைகள் வைக்க வேண்டும். அம்மன்காவு - பொன்னானி சாலை மற்றும் குன்றில்கடவு - தைதல்கடவு - பந்தபிலா செல்லும் சாலை உள்ளிட்டவை சரிசெய்து தர வேண்டும். அம்பலமூலா பூங்காவினை பராமரிக்க வேண்டும். நெலாக்கோட்டை பழைய ஊராட்சி அலுவலகம் பள்ளிக்கட்டிடத்தை பராமரித்து அதனை நூலகமாக பயன்படுத்த வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி நூலகங்கள் முறையாக செயல்படுத்த வேண்டும். சேரம்பாடி சமுதாய கூடம் பராமரிக்க வேண்டும். குன்னூர் கைகாட்டி, கூடலூர் பொன்னானி, கோத்தகிரி அரவேணு மற்றும் மாமரம் உள்ளிட்ட பகுதிகளில் பயணியர் நிழற்குடை கட்டித்தர வேண்டும். கிராம ஊராட்சிகளில் குப்பைகளை முறையாக அகற்றிட வேண்டும். குடிநீர் குழாய்கள் சாலையோரங்களில் அமைப்பதால் பழுதடைகிறது மண்ணில் புதைக்கப்பட வேண்டும் . கட்டண கழிவறையில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க வேண்டும். கோழிக்கரை நடைபாதை பணி முழுமையாக மேற்கொள்ளவும் வேண்டும் ஊராட்சிகளில் வாட்ஸ்அப் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர்
பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேசும்போது அனைத்து ஊராட்சிகளிலும் நலத்திட்டங்கள் தொடர்பான தகவல் பலகை வைக்கப்பட்டும். கைகாட்டி, பொன்னானி மாமரம் உள்ளிட்ட பகுதிகளில் நிழற்குடை அமைக்க நிதி கோரப்பட்டுள்ளது. நிதி பெற்று நிழற்குடை மற்றும் கழிப்பிடம் கட்டித்தரபடும் குப்பைகள் முறையாக அகற்ற மற்றும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. குடிநீர் குழாய்கள் சாத்தியக்கூறுகள் இருப்பின் மண்ணில் புதைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாட்ஸ்அப் புகார்களுக்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா மறுமலர்ச்சி நூலகங்கள் செயல்பட மாத சம்பளம் ஒதுக்கீடு குறைவாக உள்ளதால் பணியாளர்கள் கிடைப்பது இல்லை மாற்று நடவடிக்கைகள் மூலம் நூலகம் செயல்படுத்தப்படும். என்றனர்.
கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் எஸ்.ஆர். சோமசுந்தரம், (ஊராட்சிகள்) உதகமண்டலம், பி. குமரன் (தணிக்கை), கோத்தகிரி, அனித்தா (பொது), குன்னூர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment