கார்டிவா அக்ரி சயின்ஸ் சார்பில் நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மரம் நடும் விழா
நீலகிரி மாவட்டம் அரசு நஞ்சநாடு மேல்நிலைப்பள்ளியில் கார்டிவா அக்ரி சயின்ஸ் அமைப்பின் சார்பில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவிற்கு பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மற்றும் என்சிசி முதன்மை அலுவலர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் கார்டிவா கம்பெனியின் நீலகிரி மாவட்ட மேலாளர் பாலகிருஷ்ணன் மாணவர்களிடையே சுற்றுப்புற சூழல் பற்றி விளக்கி கூறி பள்ளி வளாகத்தை சுற்றி மரம் நடும் பணியை துவக்கி வைத்தார் 50 மாணவ மாணவிகள் மற்றும் கார்டிகா கம்பெனியின் பொறுப்பாளர்கள் சபரி அஜய் மற்றும் முதுகலை ஆசிரியர் சரவணன் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment