தலைக்குந்தா பகுதியில் கார் விபத்து
நீலகிரி மாவட்டம் 27/12/25 இன்று காலையில் உதகை-கூடலூர் சாலையில் தலைக்குந்தா பகுதியில் வாகன விபத்து. கேரளாவில் இருந்து ஊட்டியை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் காலையிலேயே தலைக்குந்தா சென்று உறைபனியை பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்த நேரத்தில் பிரேக்குக்கு பதிலாக எக்ஸ்லெட்டர் மிதித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் மழை நீர் கால்வாயில் இடித்து நின்றது அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் பயணித்த பயணிகள் காயம் இன்றி தப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment