உதகை அருகே நஞ்சநாடு முதியோர். இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டம் உதகை அருகே நஞ்சநாடு பகுதியில் அமைந்துள்ள மெர்சி ஹோமில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா மற்றும் நீலகிரி மாவட்ட செயலாளர் திரு. கே.எம்.ராஜு அவர்களின் அறிவுரை படி உதகை தெற்கு (மேற்கு) ஒன்றிய சார்பாக கழக இளைஞர் அணி செயலாளர், தமிழக துணை முதல்வர் . உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்த விழாவில் கழக நிர்வாகிகள் திரு.குப்புசாமி, திரு.ரமேஷ், திரு.சசிதரன் தமிழ்வாணி, திரு.சிவக்குமார், திரு.சரவணன் , திரு.அருண்குமார், திரு.லோகநாதன், திரு.ரகமத்துல்லா, திரு.சுந்தர்ராஜ், திரு.சேகர் மற்றும் திரு.சஞ்சீவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அட்டுமந்து மணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment