கோத்தகிரி அரவேனு அரசு பள்ளியில் கணிதவியல் கருத்தரங்கு நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 November 2025

கோத்தகிரி அரவேனு அரசு பள்ளியில் கணிதவியல் கருத்தரங்கு நடைபெற்றது


 கோத்தகிரி அரவேனு அரசு பள்ளியில் கணிதவியல் கருத்தரங்கு நடைபெற்றது.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளியில் கணிதவியல் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு கிருஷ்ணமணி தலைமை தாங்கினார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே. ஜே. ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது கூறிய கருத்துக்கள்.....


 தற்போது கல்வியின் தரம் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது அதிலும் குறிப்பாக தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறமை குறித்து பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன கல்வியின் அடித்தளமே 'எண்ணும் எழுத்தும்' ஆகும். எண் என்பது கணித அறிவை குறிக்கும் கணிதம் என்றாலே மிகவும் கடினமான பாடம் என்று பொதுவாக நம்பப்படுகிறது உண்மையில் கணிதத்தை போல இனிமையான கற்றல் அனுபவத்தை தரும் பாடம் வேறு எதுவும் இல்லை கணிதத்தை விளையாட்டாக கற்பித்தால் மாணவர்கள் கணிதத்தை விரும்புவார்கள் கணிதம் இல்லாமல் எந்தத் துறையும் செயல்படுவதில்லை நவீன கம்ப்யூட்டர்கள் 0,1 என்ற இரண்டு எண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. இன்றைய மிக நவீன அறிவியல் துறையான குவாண்டம் அறிவியல்-1,0,1 என்ற மூன்று எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. குவாண்டம் அறிவியலின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது குவாண்டம் அறிவியல் நமது ஒட்டுமொத்த பிரபஞ்சம் மனித வாழ்க்கை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கையின் இயக்கத்தை கணிதவியல் ரீதியாக விளக்குகிறது இந்த குவாண்டம் அறிவியல் நமது பாரம்பரிய நம்பிக்கைகளை எல்லாம் தவிடு பொடியாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கணிதத்தில் நாம் அனைவரும் அறிந்த பித்தாகரஸ் தேற்றம் 2500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது அதற்கு இதுவரை 350 நிரூபணங்கள் வழங்கப்பட்டுள்ளது. கணிதத்தில் பிரபலமான பை என்ற எண் கிரேக்கர்கள் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது எகிப்தின் பிரமிடுகள் பையின் மதிப்பின் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது. தற்போது பையின் மதிப்பு 3.14...…. என 50 ட்ரில்லியன்கள்  ( லட்சம் கோடி) தசம எண்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வானியலில் கருந்துளை ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும். நமது பூமியை விழுங்க கூடிய ஒரு கருந்துளையின் ஆரம் வெறும்0.88 சென்டி மீட்டர் ஆகும் கணிதமேதை ராமானுஜம் தனது 34 ஆண்டு வாழ்க்கையில்3900 புதிய கணித தேற்றங்களை கண்டறிந்தார். கணிதத்தில் நோபல் பரிசுக்கு இணையான ஏபல் பரிசு  அமெரிக்க வாழ் தமிழர் சீனிவாசன் வரதன் அவர்கள் பெற்றுள்ளார் என்பது என்பது போன்ற பல கணிதவியல் செய்திகளை கூறினார் மேலும் ஆசிரியர் ராஜு நோட்புக்கு பேனா இல்லாமல் மனதிற்குள்ளே போடும் மனக்கணக்குகள் பலவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். முன்னதாக நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை சித்ரா அனைவரையும் வரவேற்றார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad