தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு பந்தலூர் நூலகத்தில் இலவச மருத்துவ முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 November 2025

தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு பந்தலூர் நூலகத்தில் இலவச மருத்துவ முகாம்


தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு பந்தலூர் நூலகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 


தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு பந்தலூர் முழுநேர கிளை நூலகம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு, ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆல் தி சில்ரன் ஆகியன சார்பில் பந்தலூர் கிளை நூலகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு பந்தலூர் கிளை நூலகர் நித்தியகல்யாணி  தலைமை தாங்கினார். 


கொளப்பள்ளி கிளை நூலகர் முத்துசாமி, மகாத்மா காந்தி பொது சேவை மையம் தலைவர் நௌசாத், ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .


கிளை நூலகர் அறிவழகன் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் இயக்குனர் விஜயன் சாமுவேல் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.

 

இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழு மருத்துவர் ஜெயினப் பத்திலா, மருந்தாளுனர் நவீன், செவிலியர் சுமதி, நிர்வாக அலுவலர் லாய்ஷான் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.


 இம்முகாமில் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 80க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. 


நூலக பணியாளர்கள் அம்பிகா, சரஸ்வதி, ஷாலோம் டிரஸ்ட் நிர்வாகி வில்சன் தாமஸ் ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் மணி, கிருஷ்ணமூர்த்தி,  ராமச்சந்திரன், சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad