குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாயாரில் , ட்ரீ பவுண்டேஷன் சார்பில் நேற்று குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் , நடைபெற்றன பள்ளி திருவிழா போல அலங்கரிக்கப்பட்டிருந்தது, பாரம்பரிய இனிப்புகளுடன், சுவையான மதிய உணவுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். ட்ரீ பவுண்டேஷன் சார்பில் பள்ளிக்கு தவறாமல் வரும் குழந்தைகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுரேஷ் ரமணா, மற்றும் வாழ்வோம் வாழவைப்போம் பவுண்டேஷன் தலைவர் ராகேஷ் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை ட்ரீ பவுண்டேஷன் அறக்கட்டளை தலைவர் சாதிக் சிறப்பாக செய்திருந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment