பந்தலூர் அருகே பாக்கனா ஐ எம் எஸ் உயர்நிலைப் பள்ளியில் காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் மாணவர்களுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமுர்தா தலைமை தாங்கினார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் சந்திரன், ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் மற்றும் மனித உரிமை காவல் பிரிவு உதவி ஆய்வாளர் ஆரோக்கியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவல்துறை மனித உரிமை மற்றும் சமூக நீதிப் பிரிவு புள்ளியியல் காவல் ஆய்வாளர் குணசீலன் பேசும்போது நாம் வாழும் உலகில் அனைவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளது. சில நாடுகளில் நிறம், இனம், சாதி, மதம் அடிப்படையில் பிரிவினைகள் உள்ளன. இதனால் கடைநிலை பிரிவினர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் அவற்றை தவிர்க்க உலகளாவிய சட்டங்கள், இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் உட்பட பல சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவற்றின் மூலம் பிரிவினை மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் இதுபோன்று பிரிவினைகளுடன் செயல்படாமல் ஒற்றுமையாக அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும் என்றார் .
காவல்துறை மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது மாணவ பருவத்தில் நல்ல பழக்கங்கள உருவாக்கி கொண்டால் மற்றவர்களை தரக்குறைவாக நடத்த கூடாது. பெற்றவர்கள், ஆசிரியர்கள், நண்பர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். உடல் அமைப்பு, ஆடை, குறித்து கேலி செய்வதும் தண்டனைக்கு உரியது என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அனைவருக்கும் பயன்படுத்திகொள்வதன் அடிப்படையில் பயன்பெற முடியும். நமக்கு உள்ள உரிமைகள் அடுத்தவர்களை பாதிக்காத அளவுக்கு செயல்படுத்தி கொள்ள வேண்டும். நாம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடக்கூடாது. கல்வியால் உயரும் போது தானாக மதிப்பு கிடைக்கும். மாணவ பருவத்தில் கல்வியில் அக்கறை கொள்ள வேண்டும் என்றார்.
மனித உரிமைகள் குறித்து பேசிய மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment