பந்தலூர் அருகே பாக்கனா ஐ எம் எஸ் உயர்நிலை பள்ளியில் மின்சார சிக்கன விழிப்புணர்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 7 November 2025

பந்தலூர் அருகே பாக்கனா ஐ எம் எஸ் உயர்நிலை பள்ளியில் மின்சார சிக்கன விழிப்புணர்வு


பந்தலூர் அருகே பாக்கனா ஐ எம் எஸ் உயர்நிலை பள்ளியில் மின்சார சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் ஆல் த சில்ட்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஷியாபுதீன் தலைமை தாங்கினார்.


ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தமிழ்நாடு மின்சார அதிகமான கழகத்தின் உப்பட்டி உதவி மின் பொறியாளர் கார்த்திக் பேசும்போது மின்சாரத்தின் உற்பத்தி மேற்கொள்வதில் மூலப்பொருட்கள் கிடைப்பதில் செலவினங்கள் அதிகமாகின்றன. எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் போது உற்பத்திச் செலவினங்கள் குறைவாக அமையும் அதேபோல மின்சார உற்பத்திக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் வெளியாகும் புகை மற்றும் கழிவுகள் மூலம் உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மின்சாரத்தை இயக்க ஆற்றல், வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றலுக்கு ஏற்ப தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதை வழக்கமாக்க வேண்டும். தேவையற்ற ஆடம்பர பயன்பாடுகளுக்கு மின்சார தேவைகளை தவிர்க்க வேண்டும் என்றார்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது வீடுகளில் வெளிச்சம் வரும் வகையில் ஜன்னல்கள் அமைத்தல், மின்விசிறி மற்றும் மின் விளக்குகளை நமக்கேறற உயரத்தில் அமைத்து கொள்ளுதல், உடைகள் துவைக்க வாஷிங் மெஷின் மற்றும் தேய்க்க அயர்ன்பாக்ஸ் பயன்படுத்தும் போது மொத்தமாக பயன்படுத்துதல் குளிர் சாதன பெட்டிகளை அடிக்கடி திறக்காமல் பாதுகாப்புடன் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு செயல்கள் மூலம் மின்சாரத்தை சிக்கனம் படுத்தலாம். மின்சாரத்தை சிக்கனப்படுத்தி மின்சாரத்தை சேமிக்கும் மாணவர்களாக, சமுதாயமாக மாற்ற முன்வர வேண்டும் என்றார்.


நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad