நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் சாலையில் லவ்டேல் ஜங்ஷன் அருகே வாகன விபத்து.
உதகை குன்னூர் சாலையில் லவ்டல் ஜங்ஷன் அருகே உதகையில் இருந்து சென்ற சுற்றுலா வாகனம் வேகமாகச் சென்றதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே நின்று இருந்த டிப்பர் வாகனத்தின் மீது மோதி வாகனம் விபத்துக்குள்ளானது வாகனத்தில் பயணம் செய்த இருவர் பலத்த காயமடைந்து உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் விபத்து குறித்து உதகை நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திற்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு


No comments:
Post a Comment