விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற கோத்தகிரி தோட்டகலை உதவி இயக்குனர் அழைப்பு.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார தோட்டகலை உதவி இயக்குனர் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் பிரதமர் விவசாயிகள் கவுரவ உதவித்தொகை பெறுகின்ற விவசாயிகள் ஆதார் எண், கைபேசி எண், நில ஆவணங்கள் ஆகியவற்றுடன் வந்து தனித்துவ விவசாயிகள் அடையாள எண் பெறவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். ஆகவே விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற்று பயனடையுமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment