மருந்துவமனை கட்டுவதற்க்கு ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு:
கோத்தகிரி அருகே உள்ள கேசலாடா கிராமத்தில் மருத்துவமனை கட்டுப்பணி மீது பொதுமக்கள் எதிர்ப்பு பரபரப்பு
கோத்தகிரி அருகே உள்ள அரவேனு ஊராட்சி கேசலாடா கிராமத்தில் புதிய அரசு மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஒரு பிரிவு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
அரவேனு ஊராட்சி மூணுரோடு பகுதியிலுள்ள தற்போதைய அரசு மருத்துவ நிலையம் புதிய கட்டிடத்துடன் மேம்படுத்தப்படும் என சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
இந்த இடத்தில் மருத்துவமனை வந்தால் நாங்கள் பாரம்பரியமாக செய்து வரும் பூசைகள் இறப்புச் சடங்கு மற்றும் தெய்வ வழிபாட்டு நிகழ்வுகள் பாதிக்கப்படும் மருத்துவமனைக்கு மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்
மாவட்ட நிர்வாகம் முந்தைய பேச்சுவார்த்தைகளில் மாற்று இடம் குறித்து ஆய்வு செய்திருந்தாலும் கிராம மக்கள் காட்டிய இடம் சரிவானதும் புதிய கட்டிடத்துக்கு பொருத்தம் இல்லாததுமாக இருப்பதால் தற்போது மருத்துவமனை செயல்படும் அதே இடத்தில் மேம்பாட்டு கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்த மருத்துவமனை அருகில் பெரும்பாலான ஏழை தொழிலாளர் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு உடனடி மருத்துவ சேவை மிகவும் அவசியம் எனவே பொதுமக்கள் நலனுக்காகவே இந்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது
இதனால் ஒருபுறம் மருத்துவ சேவை தேவைப்படும் மக்கள் மறுபுறம் பாரம்பரிய கலாச்சார சடங்குகளைப் பாதுகாக்க விரும்பும் மக்கள் என இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது
இந்த பிரச்சனையை வளரவிடாமல் அமைதி குலையாமல் சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சனைக்கு சுகாதாரதுறையும் ஊராட்சி நிர்வாகவும் மாவட்ட நிர்வாகமும் தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரின் கோரிக்கையாக உள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment