தூனேரி அரசு மாதிரி பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தூனேரி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் குவாண்டம் அறிவியலின் நூறாவது ஆண்டை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு புத்தக கண்காட்சி மற்றும் கோளரங்கம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. பார்வதி அவர்கள் தலைமை தாங்கினார். உதகை அரிமா சங்கம் கிங்ஸ்-ன் தலைவர் திரு. சந்தோஷ் செயலர் திரு. ராயப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் திரு.கே .ஜே. ராஜு அவர்கள் சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்டு பேசினார் அவர் கூறிய கருத்துக்கள்.....
17 ஆம் நூற்றாண்டில் கொடி கட்டி பறந்த விஞ்ஞானி நியூட்டன் பூமியில் மட்டுமல்ல சூரிய குடும்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கேலக்ஸிகள் இயங்கும் விதத்தை கணித சமன்பாடுகள் மூலம் நிறுவினார். கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் அவருடைய கண்டுபிடிப்பு அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகள் ஒரு அணுவிற்கு உள்ளே இருக்கும் அணு துகள்கள் நியூட்டன் விதிகளுக்கு எதிராக செயல்பட்டன. 1925-ல் ஐன்ஸ்டீன் அணுத்துகள்களுக்குள் ஏதோ குழப்பம் இருக்கிறது என்று மட்டும் கூறினார். பின்னர் வந்த விஞ்ஞானிகள் அதை கண்டறிந்து குவாண்டம் அறிவியல் என்று பெயரிட்டனர். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து துகள்களும் இயங்கிக் கொண்டே யிருக்கின்றன. ஒவ்வொரு துகளிலும் ஆற்றல் நிறைந்திருக்கிறது என கண்டறிந்தனர். இன்று அது ஒரு மிகப்பெரிய தொழில் நுட்பமாக உருவாகியுள்ளது. நம் உடல் முதுமை அடைதல் குழந்தைகள் வளர்தல் இலைகள் பச்சையம் தயாரித்தல் நாம் கண்ணை சிமிட்டுதல் இவை அனைத்தும் குவாண்டம் அறிவியலின் செயல்பாடுகளே என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வருங்காலத்தை ஆளப்போகும் இந்த குவாண்டம் அறிவியலை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை கூறினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மேற்கு நாடு சீமை தலைவர் திரு. மணிவண்ணன் அவர்கள் புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே விரிவாக பேசினார். அரிமா சங்க உறுப்பினர்கள் திரு. குமார் மற்றும் திரு. அசோக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் பின்னர் அரிமா சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு மாணவருக்கும் துளிர் என்ற அறிவியல் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது அதன் பின்னர் நடைபெற்ற கோளரங்கம் நிகழ்ச்சி மாணவர்களை குதூகலப்படுத்தியது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment