பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்
கோத்தகிரியில் சாக்ஷி அமைப்பினால் அனுசரிக்கப்பட்டது. இந்த வருடத்திற்கான கருப்பொருளாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் இனைய வழி குற்றங்களை தடுப்பதற்காக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியை கோத்தகிரி பேரூராட்சி தலைவி திருமதி ஜெயக்குமாரி மற்றும் கோத்தகிரி காவல் ஆய்வாளர் திரு ஜீவானந்தம் கொடியசைத்து தொண்டகி வைத்தனர். பேரணியானது கோத்தகிரி பேருந்து நிலையத்தில் தொடங்கி, மார்கெட், ஜான்ஸ்டோன் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம், காந்தி மைதானம் வழியாக சென்று பஞ்சாயத் யூனியன் அலுவலகம் சென்றடைந்தது. அங்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவின் செயலாளர் நீதிபதி திரு பாலமுருகன் முன்னிலை வகித்தார். அவருடன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, மாவட்ட சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை, ஒருங்கிணைந்த சேவை மையம் ( Osc), கோத்தகிரி பேரூராட்சி தலைவர் திருமதி ஜெயக்குமாரி மக்களுக்கு இணையவழியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் குற்றங்கள் குறித்தும் அதை தடுக்கும் வழிமுறைகளை குறித்தும் விழிப்புணர்வு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ஐலேண்ட் அறக்கட்டளை, இசை அறக்கட்டளை, MCC சமுதாயக் கல்லூரி, நீலகிரி மாவட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு, அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை, மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை, விடியல் அறக்கட்டளை, கீஸ்டோன், நாவா, ரேடியோ கோத்தகிரி, நீலகிரி சோசியல் மீடியா, வாழ்வோம் வாழ வைப்போம், குன்னூர் ஆம்புலன்ஸ் சங்கம்,டி சில்வா மாற்றுதிறனாளிகள் பள்ளி ப்ளூமௌன்டைன் பாதுகாப்பு சங்கம், 3 ஸ்டார் போன்ற அமைப்புகளில் இருந்தும், பொதுமக்களும் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment