பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 November 2025

பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

 


பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.


இம்முகாமில் முதல்நாள் கருத்தரங்கம் நுகர்வோர் விழிப்புணர்வு தலைப்பில் நடைபெற்றது.


பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நந்தகோபால், பள்ளி ஆசிரியை ஜோதி, சமூக ஆர்வலர்கள் இந்திரஜித், பீட்டர், சிவகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது வணிக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு பொருட்கள் தரம் என்கிற அடிப்படையில் பொய்யான தகவல்களை சேர்த்து விளம்பரம் செய்கின்றனர்.  தரமற்ற பொருட்களுக்கு சினிமா, விளையாட்டு பிரபலங்கள் மூலம் மிகைப்படுத்தி விளம்பரம் செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் திணிக்கிறது. விளம்பரங்களில் உள்ள தகவல்கள் உண்மையா, நமக்கு அந்த பொருளின் தேவையா என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும். உணவுகளில் ஊட்டச்சத்து உணவுகளை தேர்வு செய்ய வேண்டும். ஊட்டச்சத்து பணங்களில் சேர்க்கப்பட்டுள்ள அதிக சர்க்கரை, கொழுப்பு, இரசாயனங்கள் அளவுகள் அதிகரித்து உள்ளது. இதனால் உடலில் சர்க்கரை கொழுப்பு சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றை தவிர்க்க வேண்டும். கறி கோழி மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படும் முட்டை, மரபானு மாற்றப்பட்ட காய்கறிகளில் உயிர்மை சத்துகள் இருக்காது. இவற்றை தவிர்த்து ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய உணவுகள் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் என்றார்.


நுகர்வோர் பாதுகாப்பு மைய துணை தலைவர் நாராயணன் பேசும்போது மாணவ பருவத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நல்ல பண்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். எந்த பொருளை வாங்கினாலும் பொருட்களின் தயாரிப்பு தேதி, நிறுவனம், கலாவதி தேதி, ஊட்டச்சத்து விவரங்கள், எடை, விலை உள்ளிட்ட தகவல்களை பார்த்து வாங்க வேண்டும். கலப்பட உணவுகள், தரமற்ற உணவுகள் விற்பனை செய்வதை அறிந்தால் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad