எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் 31-10-2025 அன்று 21 வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.கல்லூரி செயலாளர் திரு.எஸ்.மோதிலால் கட்டாரியா அவர்கள் விழாவைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழக தாவரவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் திரு.பரிமேலழகன் தங்கராஜ் அவர்கள் கலந்து கொண்டு விழா சிறப்புரையாற்றினார்.அவர் தனது உரையில், "எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி பெண் கல்வியை முன்னெடுத்துச் செல்வது பாராட்டுதலுக்கு உரியது.பெண்கள் சமூகத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழ வேண்டும். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் மாணவிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சமுதாயம் சார்ந்த பொறுப்புணர்வும், தன்னம்பிக்கையும் , முயற்சியும், உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்" என்று கூறினார். பின்னர் பட்டம் பெற்ற பல்வேறு துறை சார்ந்த 123 மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர். கே.சுஜாதா அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கல்லூரித் தலைவர் திரு. என். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கணிதவியல் துறை பேராசிரியர் திருமதி.எஸ்.வி. ஹேமலதா அவர்கள் கல்வியாண்டிற்கான ஆண்டறிக்கை வாசித்தார். கணிதவியல் துறை பேராசிரியர் முனைவர். கல்பனா அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரி பொருளாளர் திரு.மேனக்சந்த், நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத்குமார் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.


No comments:
Post a Comment