அரசு பேருந்துக்கு பாரம்பரிய முறைப்படி பூஜை செய்த தொடரின ஊர் பொதுமக்கள்
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அருகே உள்ள அவலாஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முள்ளிமந்து, தெப்பக்கோடு மந்து, பாரதி நகர், அவலாஞ்சி, பவர் ஹவுஸ் போன்ற பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் செல்ல வசதியாக காலை 8:30 மணி அளவில் பேருந்து வசதி வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்கள் இந்நிலையில் மாவட்ட நிர்வாகமும் ,தமிழக அரசும் பரிசீலித்து தற்போது அவலாஞ்சி பகுதிக்கு காலை எட்டு முப்பது மணி அளவில் புதிய பேருந்து சேவை துவக்கி உள்ளது இந்த பேருந்து பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி இப்பகுதிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கும் வசதியாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர் மேலும் காலை 7:15 மணியளவில் உதகையிலிருந்து புறப்படும் இந்த பேருந்தின் மூலம் அவலாஞ்சி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வந்தால் மதியம் 12:30 மணிக்கே செல்லும் பேருந்து முலம் சுற்றுலா பயணிகள் இந்த பகுதிகளை சுற்றி பார்க்க ஏதுவாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் பேருந்தை வரவேற்கும் வகையிலும் இன்று காலை இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூடி தோடரின பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்து பேருந்து சேவையை துவக்கி வைத்தனர் மேலும் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துணை ஆசிரியர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன்



No comments:
Post a Comment