நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 78வது தேசிய மாணவர் படை விழா
நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 தமிழ்நாடு தனி அணி என் சி சி அமைப்பாளர் சார்பில் தேசிய மாணவர் படைவிழா நடைபெற்றது நீலகிரி மாவட்ட கமாண்டர் கர்ணல் சி எஸ் சித்திக் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விழாவினை பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமையில் மற்றும் என் சி சி முதன்மை அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலையில் 78வது என் சி சி தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மழைநீர் சேகரிப்பு பேரணியும் அருகே உள்ள நரிகுளியாடா கிராமத்தில் மரம் நடு விழாவும் நடத்தப்பட்டது பேரணியானது பள்ளியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் வி பி என் மற்றும் மொட்டோரை நரிகுளி ஆடா என்ற பகுதி வரை நடைபெற்றது. நரிககுளியாடா தலைவர் முன்னிலையில் மரம் நடப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை என்சிசி முதன்மை அலுவலர் அற்புதமாக செய்திருந்தார்.
தமிழக குரல் இணையதள செய்தி செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment