எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி சார்பாக நாட்டு நல பணி திட்டம்
(NSS) நாட்டு நல பணித்திட்டம்.உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் சார்பாக நாட்டு நல பணி திட்டம் சார்பில் நடத்தப்படும் ஏழு நாட்கள் சிறப்பு முகாம் உதகை மேல் கவ்வட்டியில் 6/ 10 /2025 முதல் 12 /10 /2025 வரை சிறப்பாக நடத்தப்படுகிறது. முகாமின் முதல் நாள் 6 /10/ 205 அன்று காலை 10 மணிக்கு தொடக்க விழா தொடங்கப்பட்டது இதற்கு கல்லூரியின் செயலர் மோதிலால் கட்டாரியா அவர்களின் வழிகாட்டுதலின்படியும் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே. சுஜாதா அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில் காலை நேரத்தில் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வ தொண்டர்கள் அனைவரும் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து பதிவு செய்தனர். அதன் பின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி. கல்பனா பொறுப்பில் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சமூக சேவையின் முக்கியத்துவத்தை பற்றி உரையாற்றினர். தொடர்ந்து நடைபெற்ற துவக்க விழாவில் ஊர் தலைவர் திரு . நடராஜ் துணைத் தலைவர் திரு. ராஜேந்திரன் உறுப்பினர் திரு ராஜா மணி ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளை ஊக்க வித்தனர். முனைவர் பி. கல்பனா அவர்கள் நிகழ்வின் தொடக்கமாக வரவேற்புரை வழங்கினார் .அதன் பின் முனைவர் கா. தவமணி அவர்கள் ஊர் தலைவர் அவர்களின் சிறப்பிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.பின்னர் முனைவர் எஸ் வித்யா அவர்கள் துணைத்தலைவர் அவர்களை சிறப்பிக்கும் விதமாக அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துரை வழங்கினர். அதன் பின் மாணவிகள் அனைவரும் கிராமத்தை சுத்தம் செய்வதற்காக குழுவாக பிரிக்கப்பட்டனர். மாணவிகள் சார்பில் கணிதத்துறை மாணவி நிவேதினி நன்றியுரை ஆற்றினார் . கோவில் வளாகம், வாகனங்கள் நிறுத்தம் இடம், சமுதாயக் கூடம் போன்ற இடங்களை சுத்தம் செய்தனர். தன்னார்வலர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர்.தன்னார்வ தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாலை நேரம் கோவில் வளாகத்தின் உட்புறத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர் . இது அந்த ஊரின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக நடைபெற்றது .ஊர் பெரியவர்களிடம் மரங்களின் முக்கியத்துவம் பற்றி மாணவிகள் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார்கள். இம்மரங்கள் எங்கள் எமரால்டு ஹைட்ஸ் கல்லூரியின் சார்பாக நடவு வைக்கப்பட்டுள்ளது என்பதனை ஊர் பொது மக்களிடம் மாணவிகள் சிறப்பாக எடுத்துரைத்தனர். மாலை நேரத்தில் குழு விவாதம் நடத்தப்பட்டு சமூக சேவையின் அவசியம் குறித்து மாணவிகள் தங்களது எண்ணங்களை பகிர்ந்தனர் முகாமின் முதல் நாள் சிறப்பாக நிறைவடைந்தது இந்த நாள் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வ தொண்டர்களுக்கு சேவை உணர்வை வளர்க்கும் ஒரு சிறந்த நாளின் தொடக்கமாக அமைந்தது.உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக ஊட்டியில் உள்ள நஞ்சநாடு பஞ்சாயத்தின் கீழ் உள்ள மேல் கவ்வட்டியில் ஏழு நாள் சிறப்பு முகாமின் 7 /10/ 2025 ஆன இரண்டாம் நாளான இன்று ஊட்டி தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் வரவழைத்து ஊர் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு கல்லூரியின் செயலர் திரு .எஸ்.மோதிலால் கட்டாரியா அவர்கள் சிறப்பான உறுதுணை அளித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கே. சுஜாதா அவர்கள் வழிநடத்தினார். இக்கண்பரிசோதனை முகாமில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர் .இதனைத் தொடர்ந்து கோவில் வளாகம்
பேருந்து நிறுத்தம் பள்ளி சுற்றுப்புறம் பெரிய வீட்டு வளாகம் போன்ற பகுதிகளை தன்னார்வ தொண்டர்கள் ஒன்றிணைந்து தூய்மைப்படுத்தினார்கள். இதனை நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி. கல்பனா கண்காணித்தார் இவருடன் உறுதுணையாக பேராசிரியர்கள் முனைவர் கா .தவமணி முனைவர் , வித்யா ஆகியோர்கள் உதவி புரிந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என்வினோத்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு நீலகிரி மாவட்டம
No comments:
Post a Comment