சட்டம் தன் கடமையைச் செய்யுமா??? இல்லை பூனை போல் பதுங்கி விடுமோ....
நீலகிரி மாவட்டம் காட்டேரியில் இருந்து ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி இல்லாமல் பாறைகள் உடைப்பு. காட்டேரி பகுதியில்சில மாதங்களாக நெடுஞ்சாலைக்கு சொந்தமான பகுதியில் மண் சரிவை தடுப்பதற்கு தடுப்புச் சுவர்களை ஆக்கிரமித்து அதில் சொந்த பூமிக்கு வழித்தடங்கள் ஏற்படுத்தி வருகின்றனர். இதில் பாறைகள் இருந்ததால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்த காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலையின் தடுப்புச் சுவரை இடித்து அதில் உள்ள பாறைகளை அதிக காற்றழுத்தம் கொண்ட இயந்திரங்கள் மூலம் துளையிட்டு அதில் வெள்ளை நிறம் கொண்ட ஆசிடுகளை ஊற்றியும் அதனை வாகனங்கள் மூலம் எடுத்து வேறு ஒரு பகுதியில் பாறைகளையும் அங்குள்ள மண் கழிவுகளையும் சேலாஸ் செல்லும் பகுதியில் சாலையோரம் பகுதியில் கொட்டி வருகின்றனர் இதில் எந்த ஒரு அதிகாரி கண் தெரியாதது மிகவும் பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் மிகவும் வேதனையை அளிக்கின்றனர் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அதற்கு தீர்வு கண்டு சட்டம் தன் கடமையைச் செய்யும் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment