கோத்தகிரி கன்னேரிமுக்கு குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியை தாண்டி பல ஊர்கள் உள்ளன. எப்போதும் இரவிலும் பரபரப்பாக வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ள டவுன் பகுதியாகும். இரவு 1 மணிக்கு குடியிருப்புகள் உள்ள சாலை பகுதியில் சிறுத்தை சாவகாசமாக உலா வரும் காட்சி மூர்த்தி அவர்களின் கன்னேரிமுக்கு பேக்கரிக்கு அருகே உள்ள அவரது குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசி டிவியில் பதிவாகியுள்ளது. பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் சிறுத்தையை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment