நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இணைந்து உதகை மலைப்பகுதி மகளிர் விடியல் பயணம் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயண துவக்க விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமை கொறடா திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (06.10.2025) மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் குப்புராஜ்,மாவட்ட போக்குவரத்து துறை பொது மேலாளர் ஜெகநாதன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார்,மாவட்ட அவைத் தலைவர் போஜன்,மாவட்ட பொருளாளர் நாசர் அலி,பொதுக்குழு உறுப்பினர்கள் -தம்பிஸ்மைல்,மகேஷ் வாணிஸ்வரி,நகர செயலாளர்கள் ஜார்ஜ், ரமேஷ்,ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீஷ்,தொரை, தொமுச நெடுஞ்செழியன். ரீட்டாமேரி MC, ஆனந்தன், செந்தில், ஸ்டேன்லி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment