தோடா் இனப் பெண்கள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகாா் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 October 2025

தோடா் இனப் பெண்கள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகாா்

 


உதகையில் தோடா் பழங்குடியின பெண்கள் செய்து வரும் எம்ராய்டரி பணிக்காக புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ள நிலையில், உதகையைச் சோ்ந்த தோடா் அல்லாத சிலா்  எம்ராய்டரி பணிகளை மேற்கொண்டு வருவதாக தோடா் இனப் பெண்கள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.


இது குறித்து தோடா் பழங்குடியினா் பெண் நிா்வாகி பூமா தலைமையில் உதகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷாவிடம் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது: தோடா் பழங்குடியினத்தைச் சோ்ந்த ஆண்கள் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். அதேபோல பெண்கள் பூத்துக்குளி எனப்படும் எம்ராய்டரி சால்வைகள் நெய்து விற்பனை செய்து வருகின்றனா்.


இந்த எம்ராய்டரி சால்வைகள் உதகைக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, புவிசாா் குறியீடும் பெறப்பட்டுள்ளது. 


இந்நிலையில்  உதகையைச் சோ்ந்த தோடா் அல்லாத  சிலா் , இந்த  எம்ராய்டரி பணிகளை மேற்கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி செய்து வருவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு பாரம்பரிய தொழில் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad