மானாமதுரை பேருந்து நிலையத்தில் தொடரும் அவலநிலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் வாகனங்களை பொதுமக்கள் அமரும் இடங்கள் மற்றும் பயணிகள் காத்திருப்பு இருக்கைகள் மத்தியில், பயணிகளுக்கு தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்தி வருவது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வியாபாரிகள் கடைகளுக்கு தேவையான வியாபார பொருட்கள் மற்றும் காய்கறிகளை மூடை மூடையாக சேமித்து வைக்கும் குடோனாகவும், கடைகளுக்கு தேவையான காய்கறிகளை அமர்ந்து நறுக்குவதற்கும், தங்களின் சொந்த இடமாக நினைத்து பயணிகள் ஓய்வெடுக்கும் இருக்கைகளை உபயோகப்படுத்தி வந்த நிலையில், செய்தி எதிரொலி காரணமாக அதனை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர்.
மேலும் புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் கட்டண வாகன நிறுத்துமிடத்தை பயண்படுத்தாமல் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் ஆகியோர் மழையிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள காத்திருக்கும் இடங்களில் உள்ள அமரும் இருக்கை அருகில் இடையூறாக வாகனங்களை நிறுத்தி நெருக்கடி ஏற்படுத்துவதால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இப்பிரச்சனையை சரி செய்து, தக்க நடவடிக்கை எடுத்து தர வலியுறுத்தி பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment