கோத்தகிரி சாலையில் தீப்பிடித்த கார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து தனது காரில் வியாபாரி சக்கரவர்த்தி என்பவர் பழங்கள் மற்றும் புடவைகளை ஏற்றிக்கொண்டு தனது மனைவியுடன் வந்தார். அரவேனுவிற்க்கு மேற்புறம் இண்டிகோ தேயிலை தொழிற்சாலையை தாண்டிய சாலையில் வந்துகொண்டிருந்த போது காரின் இஞ்சின் பகுதியில் புகை வருவதை கண்டவர் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு தனது மனைவியுடன் அவசரமாக இறங்கிய நிலையில் முற்பகுதி தீப்பற்றியது. பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அவசர போலீஸ் எண் 100 ஐ அழைத்து விவரம் கூறினர் தகவலறிந்த கோத்தகிரி காவல்துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல்தெரிவித்து தீயணைப்புத்துறை வாகனத்துடன் கோத்தகிரி காவலர்கள் போக்குவரத்து காவலர்கள் மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆனதால் பணியில் இருந்த ஊர்க்காவலபடையுடன் இணைந்து சம்பவ இடத்திற்க்கு விறைந்து சென்று காரின் தீயை அணைத்தனர். பொருட்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை. போர்க்கால அடிப்படையில் பணியாற்றிய தீயணைப்புத்துறையினர் காவல்துறையினர் போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஊர்க்காவல்படையினரை வாகன ஓட்டிகள் பாராட்டினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment