கலைமாமணி விருது பெற்றார் நீலகிரி கோத்தகிரி நடிகை சாய்பல்லவி.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அணையட்டியை சேர்ந்தவர் சாய்பல்லவி. மருத்துவம் படித்தவர் நடனத்தில் ஆர்வம் கொண்டவர் விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். சினிமாவில் பிரேமம் என்ற மலையாள படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமாகி நடித்த நடிகை சாய்பல்லவி தனது நடனம் மற்றும் நடிப்பு திறமையால் பெயர் பெற்றதால் அடுத்தடுத்து பலபடங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்தார் அமரன் படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பு புகழப்பட்டது. தனது நடிப்பால் உயர்ந்து தமிழக அரசின் கலைமாமணி விருதை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களிடம் பெற்றார். இளம் வயதில் கலைமாமணி விருது பெற்ற நடிகை சாய்பல்லவிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இளம் தலைமுறையினரின் உந்துகோல் என பலரும் பாராட்டினர். தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்பகாக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment