வார இறுதி விடுமுறையால் ஊட்டியில் சுற்றுலா வெள்ளம் – சூட்டிங் மட்டத்தில் மக்கள் கூட்டம்:
ஊட்டி வார இறுதி விடுமுறையை ஒட்டி தற்போது ஊட்டிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்
இதனால் தாவரவியல் பூங்கா ரோஜா பூங்கா படகு இல்லம் போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் மக்கள் கூட்டத்தால் களை கட்டியுள்ளன
இந்நிலையில், ஊட்டி கூடலூர் சாலையில் அமைந்துள்ள சூட்டிங் மட்டம் பகுதி தற்போது சுற்றுலாப் பயணிகளின் பிரதான ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது உதகையின்
இயற்கையின் மாய உலகம் சூட்டிங் மட்டம்
சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ள சூட்டிங் மட்டம் மலைப் பகுதிகளுக்குள் பச்சை புல்வெளிகளால் சூழப்பட்டு கண்கொள்ளாக் காட்சியை வழங்குகிறது பனித்துளிகளால் மூடப்பட்ட மலை முகடுகள், காற்றில் அலையும் புல் தழைகள், பசுமை பரந்த வெளி என சுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் இயற்கை ஓவியத்தைப் போல் காட்சி தருகிறது
காலை நேரங்களில் மலைகளைச் சுற்றி மிதக்கும் பனி, காற்றில் கலந்து வரும் மலர் மணம் பறவைகளின் இனிமையான குரல் இவை அனைத்தும் இப்பகுதியை ஒரு இயற்கை சொர்க்கம் போல உணர வைக்கின்றன
மாலையிலும் சூட்டிங் மட்டம் அழகை இழக்காது; மலை முகடுகளுக்கு பின்னால் மறையும் சூரியன் வானில் பரவும் பொற்கதிர்கள் புகைப்பட ஆர்வலர்களுக்கு மறக்க முடியாத காட்சியாக மாறுகின்றன
படப்பிடிப்பு தளமாக சூட்டிங் மட்டம் பல தமிழ் ஹிந்த தெலுங்கு திரைப்படங்களின் பிரபலமான பாடல் காட்சிகள் மற்றும் காட்சித் தொடர்களுக்குப் பின்னணி தளமாக விளங்கியுள்ளது. இதனால், சினிமா ரசிகர்களும் தங்கள் பிடித்த நட்சத்திரங்கள் நடித்து சென்ற இடங்களை காண ஆர்வமாக வருகிறார்கள்
மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தற்போது சூட்டிங் மட்டம் பகுதியை நோக்கி பெருமளவில் வருகை தருகின்றனர் இதனால் ஊட்டி கூடலூர் சாலையில் வாகன நெரிசலும் அதிகரித்துள்ளது
அதேசமயம் சூழல் மேம்பாட்டு குழுவினருக்கு அதிக வருவாய் கிடைக்க தொடங்கியுள்ளது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment