கோத்தகிரி - கன்னேரிமுக்கு தபால் அதிகாரிக்கு பிரிவு உபச்சார விழா.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு கிளை தபால் அதிகாரி திரு. A. நந்தகுமார் அவர்கள் இன்று (22.10.2025 புதன்) பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அவருக்கு நேரில் சென்று நீலகிரி கோட்ட அஞ்சலக முதன்மை கண்காணிப்பாளர் உயர்திரு. அசோக்குமார் அவர்கள் அவருடன் கோத்தகிரி தலைமை தபால் நிலைய தபால் அதிகாரி உயர்திரு. ஜெயக்குமார் அவர்கள் சால்வை அணிவித்து அவரது சிறப்பான பணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். உள்ளூர் மக்கள் கன்னேரிமுக்கு கிளை தபால் நிலையத்தால் பயன்பெறும் மக்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்துதெரிவித்தனர். மாலை கோத்தகிரி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் திரு. நந்தகுமார் அவர்களின் பணி நேர்த்தி சிறப்புகள் பற்றி அஞ்சலக அதிகாரிகள் பணியாளர்கள் நினைவு கூர்ந்து பிரியாவிடை கொடுத்து அவரது இல்லம் வரை அழைத்து வந்து சேர்த்தனர். ஏராளமானவர்கள் தொடர்ந்து வாழ்த்து கூறினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment