ஊட்டி சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை சிறப்பு வழிப்பாடு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 October 2025

ஊட்டி சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை சிறப்பு வழிப்பாடு


ஊட்டி  சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை சிறப்பு வழிப்பாடு  :                  


ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கி ழமை தோறும் சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை கள் நடைபெறுவது வழக்கம்.


 அதன் ஒருபகுதியாக புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடத்துவது என கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.


இதன்படி  இன்று காலை.ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தம்பதி சமேதராய் அருள்பாலித்த சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்-வழிபாடுகள் நடத்தப்பட்டன. முன்னதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருக்கல் யாண வைபவத்துக்காக மேளதாளத்துடன் சீர்வரிசை தட்டுகள் எடுத்து வந்திருந்தனர்.


தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க இறைவனுக்கு திருக்கல்யா ணம் நடைபெற்றது. அப்போது கோவிந்தா... கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தர்கள் மனமு ருக வழிபட்டனர். தொடர்ந்து சீனிவாச பெரு மாள் தம்பதி சமேதராக பக்தர்களுக்கு அருள்பா லித்தனர்.


ஊட்டி பெருமாள் கோவில் திருக்கல்யாணத்தில் சுற்றுவட்டார பகுதிக ளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசா தம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சீனி வாசபெருமாளின் திருவீதி உலா, கோலாகலத்துடன் தொடங்கியது. 


கோவில் முன்பு தொடங்கிய சுவாமிகள் ஊர்வலம் மார்க்கெட், லோயர்பஜார், பஸ் நிலையம், மெயின்ப ஜார், காபிஹவுஸ் சந்திப்பு வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அப்போது வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான பக்தர் கள் திரண்டு வந்து சுவாமி களை மனமுருக பரவசத்துடன் தரிசனம் செய்தனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad