பொதுமக்களின் அடிப்படை உரிமையை அலட்சியப்படுத்தும் அரசாங்கம் பல வருடங்களாக தார் சாலை அமைத்து தராத அரசால் கொந்தளித்து களத்தில் இறங்கிய ஊர் பொது மக்கள்
நீலகிரி மாவட்டம் இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் செவி சாய்க்காத அரசால் நொந்து போன மக்கள் களத்தில் இறங்கி தங்களது ஊர் தார் சாலையை தாங்களே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இத்தகைய மழைக்காலங்களில் இத்தகைய சிரமத்திற்கு உள்ளாக்கும் சம்பந்தப்பட்ட துறையினர் இதற்கு மேலயாவது செவி சாய்த்து கண்டு கொண்டு தார் சாலையை சீரமைத்து தருவார்களா என கேள்வி எழுப்பி குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment