நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் மூலமும் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் இணைந்து போதை விழிப்புணர்வு பேரணி 2025 நீலகிரி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் செயலாளரும், நீதிபதி பாலமுருகன் ஐயா அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார் உடன் போக்குவரத்து ஆய்வாளர் திரு குருசாமி அவர்களும் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவரும் உடன் இருந்தனர்
இந்த பேரணி தொடக்கமாக அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் போதை விழிப்புணர்வானது நடைபெற்றது இதில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் நீலகிரி மாவட்ட செயலாளர் திரு வினோத் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் அதனை தொடர்ந்து தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களில் தலைவர் முன்னிலை உரை ஆற்றினார் பின் நீலகிரி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் செயலாளரும், நீதிபதி பாலமுருகன் ஐயா அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள் பின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களுக்கும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் இறுதியில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களில் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திரு சுரேஷ் ரமணா அவர்கள் நன்றியுரை கூறினார். பின் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் நமது தமிழக குரல் செய்தி தளத்தின் துணை ஆசிரியரும் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் குந்தா ஒன்றிய அமைப்பாளருமான திரு கே எஸ் டி மகேந்திரன் அவர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் தமிழக குரல் செய்தி தளம் செய்தி வெளியிடுவதில் மட்டும் இல்லாமல் மக்களுக்கு தொண்டாற்றும் சேவையும் புரிந்து வருவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என்பதில் பெருமிதம் கொள்கிறது தமிழக குரல் செய்தி தளம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment