நீலகிரி குந்தா சப்பையில் பகலில் புலி நடமாட்டம் மக்கள் அச்சம்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள குந்தாசப்பை ஹட்டியில் தேயிலை தோட்டத்தில் பகல் நேரத்தில் புலி நின்று கொண்டிருந்ததை ஒரு வாகன ஓட்டி படம்பிடித்து சமூக வளைதளங்களில் பதிவிட்டதில் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் தோட்ட வேலையில் இருந்த ஒரு பெண்ணை கொன்றதுடன் பல பேரையும் தாக்கி ஆடுமாடுகளையும் வேட்டையாடிய ஆட்கொல்லி புலியால் 15 நாட்களுக்கு மேல் குந்தாசப்பையை சுற்றியுள்ள பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்து மிகவும் சிரமப்பட்ட நிலையில் வனத்துறையினர் கூண்டுவைத்தும் சிக்காமல் போக்கு காட்டியது கடைசியில் மயக்க ஊசி செலுத்தி பிடித்து சரணாலயம் கொண்டுசென்று இறுதியில் கோர்ட் உத்தரவுபடி கொல்லப்பட்டது. சிறிது காலம் நிம்மதியாக இருந்த நிலையில் மீண்டும் பகல் நேரத்தில் புலி ஊருக்குள் உள்ள தோட்டத்தில் உலா வருவதுபொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்பது குந்தாசப்பை சுற்றுவட்டார பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment