தாளூர் கல்லூரியில் இரத்த தான முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 October 2025

தாளூர் கல்லூரியில் இரத்த தான முகாம்

 


தாளூர் கல்லூரியில் இரத்த தான முகாம்


பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி கலை அறிவியல் கல்லூரி என் சி சி மற்றும் இளம் செஞ்சிலுவை சங்கம், கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி ஆகியன இணைந்து நடத்திய இரத்த தான முகாம் கல்லூரியின் வள்ளுவர் அரங்கில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 


கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன், நிஷார், கல்லூரி பேராசிரியர்கள் லின்சி, லிமா தோமஸ், அபிஷேக், மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி மகேந்திரபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுகைப் முகாமினை துவக்கி வைத்தார். 


கூடலூர் அரசு தலைமை மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ குழுவினர் மஞ்சு, வனிதா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மாணவ மாணவிகள் தனமாக வழங்கிய இரத்தம் சேகரித்தனர். 


முகாமில் 25 பேர் இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கி கௌரவிக்கபட்டது.


ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் நித்யா, ஆஷா பணியாளர்கள் இந்துமதி, ரெதி, சிந்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad