மேரா யுவபாரத் சார்பில் கோத்தகிரி வட்ட அளவிலான - விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள்
இளைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில் நீலகிரி மாவட்டத்தில் மேரா யுவபாரத் சார்பில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் இன்றைய தினம் கோத்தகிரி காந்தி மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது,வட்டளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நீலகிரி மாவட்ட சமூக தன்னார்கள் கூட்டமைப்பின் இளைஞர் அணி செயலாளர், கோவர்த்தனன் ராமசாமி, கோத்தகிரி ஜேசிஐ தலைவர் விவேக் பொன்தோஸ்,வாழ்வோம் வாழவைப்போம் பவுண்டேஷன் தலைவர் ராகேஷ் கலந்து கொண்டனர்.
கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுரேஷ் ரமணா முன்னிலை வகித்தார் மேரா யுவ பாரத் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment