கோத்தகிரி அரவேனுவில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு ஆல்பா ஜி.கே. பள்ளியில் தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத்துறையினர் மக்கள் நல்வாழ்வு துறையினர் பள்ளியின் தன்னார்வல மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். நீலகிரி மருத்துவத்துறையினர் அனைத்து மருத்துவ உபகரணங்கள் ஆன இ.சி.ஜி. , ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் லேப் வசதியுடன் கூடிய பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்திருந்தனர். இந்த முகாமில் 1500 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment