பந்தலூரில் அயோடின் உப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பந்தலூர் பவித்ரா தட்டச்சு பயிற்சி மையத்தில் அயோடின் உப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தினத்தை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆல் தி சில்ட்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பவித்திரா தட்டச்சு பயிற்சி மைய முதல்வர் எபினேஷர் தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌஸாத், ஆல்ஃபா திறன் பயிற்சி மைய முதல்வர் ரஞ்சன் விக்னேஷ், அம்பேத்கார் மக்கள் இயக்கம் செயலாளர் இந்திரஜித், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது அயோடின் என்பது நமது உடலுக்கு தேவையான நுண்ணூட்ட சத்து ஆகும். இது கருவில் இருக்கும் குழந்தை முதல் இறப்பு வரை மனிதர்களுக்கு மிகவும் அத்தியாவசிமானது ஆகும். இதனால் மக்கள் அதிகம் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் உப்பில் சேர்த்து வழங்கப்படுகிறது. இயற்கையாக கிடைத்த அயோடின் நுண்ணூட்ட சத்து இயற்கை சீற்றம் மற்றும் மண் வளம் குறைவு காரணமாக கிடைப்பது இல்லை. இது கடல் சார் உணவுகளில் அதிகம் இருந்தாலும் அனைத்து தரப்பினரும் கடல் உணவுகளை, அசைவ உணவுகளை எடுத்து கொள்வது இல்லை இதனால் பலருக்கும் அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டு தைராய்டு சுரப்பி செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது இதனால் முன்கழுத்து கழலை, மந்த தன்மை, உடல் வளர்ச்சி இனமை, சிந்திக்கும் திறன் குறைவு, கர்ப்ப காலத்தில் குழந்தை முழு வளர்ச்சி இன்மை, குறை பிரசவம், கரு கலைதல், பெண்களுக்கு மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் உள்ளிட்ட பலவேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது.
அனைவருக்கும் அயோடின் நுண்ணூட்ட சத்து கிடைக்க வேண்டும் என்பதை உறுதி படுத்த சுகாதார ஆய்வாளர்கள் மூலம் சுழற்சி முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.
மேலும் பதப்படுத்துதல் தேவைக்கு பயன்படுத்தும் உப்பில் அயோடின் சேர்க்கபடாது எனவே அந்த வகை உப்பை உணவுக்கு பயன்படுத்த கூடாது. மக்கள் உப்பு வாங்கும் போதே அயோடின் கலந்த உப்புதானா என்பதை உறுதிப்படுத்தி வாங்கி பயன்படுத்துவதன் மூலம் அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது அயோடின் சராசரியாக 150 மைக்ரோ கிராம் முதல் 250 மைக்ரோ கிராம் அளவு தினசரி தேவை படுகிறது. எனவே தொடர்ந்து அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்த வேண்டும். மேலும் இந்து உப்பு என்பது இமயமலை அடிவாரத்தில் இருந்து எடுக்கப்படுவது. இவை மருத்துவ பயன்பாட்டிற்கானது. அதனால் அதை உணவுக்கு பயன்படுத்த கூடாது. மேலும் தற்போது இந்துப்பு என்பது சாயம் ஏற்பட்டு செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு விளம்பர படுத்த படுகிறது. உப்பில் சோடியம் மட்டுமே இருக்கும் அதனுடன் அயோடின் சேர்த்து தரப்படும். தற்போது அரசு மூலம் தமிழ்நாடு உப்பு நிறுவனம் மூலம் அரசு உப்பும், கூட்டுறவு துறை சார்பில் நெய்தல் கூட்டுறவு உப்பும் தரமான முறையில் தயாரித்து மானிய விலையில் வழங்க படுகிறது இவற்றை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.
தொடர்ந்து உப்பில் அயோடின் கலந்துள்ளது குறித்து அறிந்து கொள்ள பரிசோதனை செய்து காட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் தட்டச்சு பயிற்சி மையம் மற்றும் ஆல்ஃபா திறன் பயிற்சி மைய மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். தட்டச்சு பயிற்சி மைய ஆசிரியர் அம்பிகா வரவேற்றார். முடிவில் ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....


No comments:
Post a Comment