நீலகிரியில் விஜயதசமியை முன்னிட்டு ஊட்டி பெருமாள் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
நீலகிரியில் யூனிக் பள்ளி சார்பாக ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு ஸ்லேட், பல்பம், புத்தக பைகள் சாக்லேட்டுகளை வழங்கினர்
ஊட்டி பெருமாள் கோயிலில் விமரிசையான விஜயதசமி வித்யாரம்பம்
சிறுவர்–சிறுமிகள் கல்வி தொடக்கத்தில் பெற்றோர் உற்சாக பங்கேற்பு நவராத்திரி பண்டிகையின் பத்தாவது நாளான விஜயதசமியை முன்னிட்டு, ஊட்டி அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் பால வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று அதிகாலை விமரிசையாக நடைபெற்றது
இந்த நிகழ்வில் 2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுடன் ஏராளமான பெற்றோர் அதிகாலை முதலே கோயிலுக்கு வரத் தொடங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த தாம்பாளங்களில் நெல் மற்றும் அரிசி பரப்பி வைத்து, குழந்தைகளின் கல்வி தொடக்கத்தை மேற்கொண்டனர்
அர்ச்சகர்கள் வழிகாட்டுதலின்படி பெற்றோர் முதலில் குழந்தைகளின் நாக்கில் “ஓம் ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ” என்னும் மந்திரத்தை எழுதினர் பின்னர் குழந்தைகளின் கையைப் பிடித்து, நெல் மற்றும் அரிசியில் ‘அ’ என்று எழுத வைத்தனர். அர்ச்சகர்களும் சிறுவர்களின் கையை பிடித்து எழுத வைத்தார்கள்
சில சிறார்கள் தாங்களாகவே அரிசியில் எழுதியும் கிறுக்கியும் மகிழ்ந்தனர் இதனால் கோயில் வளாகம் குழந்தைகளின் சிரிப்பும் பெற்றோரின் ஆனந்தமும் கலந்த உற்சாக சூழலாக காட்சியளித்தது
நிகழ்ச்சியின் நிறைவாக யூனிக் பள்ளி சார்பில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு ஸ்லேட், பல்பம், புத்தகப்பைகள் சாக்லேட்டுகளை வழங்கினர் மேலும் விஜயதசமியை முன்னிட்டு தொடக்கப்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சிறப்பு மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment