மகாத்மா காந்தி 156வது பிறந்த நாள் பழங்குடியினர்களுடன் கொண்டாடப்பட்டது.
பந்தலூர் அருகே 10ம் நம்பர் பழங்குடியினர் குடியிருப்பில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் மகாத்மா காந்தியின் 156வது பிறந்த நாள் கேக் வெட்டி இன்று கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி பொது சேவை மையம் தலைவர் நௌசாத் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம், சமூக ஆர்வலர் இந்திரஜித் மகாத்மா காந்தி பொது சேவை மையம் துணை தலைவர் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பழங்குடியினர்களுடன் இணைந்து மகாத்மா காந்தி உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பழங்குடியினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:
Post a Comment