பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசிகள் மற்றும் மருத்துவ கழிவுகள் சாலை ஓரங்களில் கிடப்பதால் பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மக்கள்கள் வாழ்ந்து வருகின்றனர் இங்கு அரசு பொது மருத்துவமனை, இரண்டு தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளது. அப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசிகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் குப்பைத்தொட்டிகள் போடாமல் சாலை ஓரங்களில் கிடப்பதால் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அச்சம். இத்தகைய பயன்படுத்தப்பட்ட கழிவுகள் கிட்டப்பதால் நோய் தொற்று அபாயமும் ஏற்பட உள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றனர். நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட துறையினர் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment