அரசு நஞ்சநாடு மேல்நிலைப் பள்ளியில் 25 மாணவர்கள் பங்கு பெற்று நாட்டு நலப்பணி திட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி நஞ்சநாட்டில் நாட்டு நலப்பணி திட்டம் ஐந்தாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது நாட்டு நல பணி திட்ட அலுவலர் சரவணன் தலைமையில் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலையில் முகாம் நடைபெற உள்ளது பள்ளியின் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன ஆங்காங்கே வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடுதலும் நடைபெறுகிறது ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது இதில் 25 மாணவர்கள் பங்கு கொண்டு சிறப்பித்து வருகின்றனர் முகாமில் ஆசிரியர்கள் சசிபூசன் சக்திவேல் விசுவநாதன் விஜயகுமார் கலந்து சிறப்பித்தனர். முடிவில் என் சி சி முதன்மை அலுவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment