நெடுகுளா - அ.இ.அ.தி.மு.க. 54 ஆம் ஆண்டுவிழா கொண்டாட்டம்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நெடுகுளாவில் அ.இ.அ.தி.மு.க. 54 ஆம் ஆண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. நெடுகுளா மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர் மக்கள் ஒன்று கூடி குன்னூர் சட்டமன்றத் தொகுதி அஇஅதிமுக பொதுக்குழு உறுப்பினர் திரு. K.K. மாதன் அவர்கள் தலைமையிலும், கோத்தகிரி மேற்கு ஒன்றிய அஇஅதிமுக செயலாளர் திரு. கம்பட்டி குமார் அவர்களுடன் ஏராளமான நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி டாக்டர் J. ஜெயலலிதா உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து கட்சிகொடியேற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்திகள் ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment