வைகை அணை உபரிநீர் வெளியேற்றம், 5 மாவட்ட கரையோரம் கிராம மக்களுக்கு 2-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 20.10.2025 நண்பகல் 1.00 மணி அளவு நிலவரப்படி 69.00 அடியை எட்டியதை தொடர்ந்து அணைக்கு வரும் உபரிநீர் வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு வினாடிக்கு 1000 கனஅடி என்ற வீதத்தில் உள்ளது.
எனவே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ கூடாது என வைகை அணை உப கூட்டத்தின் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment